குழந்தைகள் தினம் - குதூகலமாய் கொண்டாட வேண்டிய நாள் இன்று. குழந்தைகளுடன் இருந்த நேருவின் நெகிழ்வில் , மகிழ்வில் அவர் உதிர்த்த வார்த்தை முத்துக்கள்- குழந்தைகள் தினமாய் கொண்டாடுகிறோம் . நேருவுக்கு எப்படி ரோஜாக்களை பிடித்ததோ அதேபோல குழந்தைகளுக்கும் ரோஜாக்களை பிடிக்கிறது அதுவும் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் என்றால் இஷ்டமோ இஷ்டம் . இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியா என்றார் . ஆனால் நாமோ இன்றைய குழந்தைகள் தான் நாளைய பணியாளர்கள் என்று வளர்க்கிறோம். அதிலும் அழுத்தமாய் பணி என்று சொல்லியே வளர்க்கிறோம். உளவியல் துறையில் சிறந்து விளங்கும் ஒருவராலேயே தன் குழந்தையை சரியாக வளர்க்க தடுமாறுகிறார்கள். இதை கேட்டால் இந்த உலகத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப ஓட வேண்டும் என்கிறார்கள் . அப்படி ஓடி எதை சாதிக்க வேண்டும் ? கூகிள் சுந்தர் பிச்சையாய் இருந்தாலும் சரி , அம்பானியாய் இருந்தாலும் , குழந்தைகள் என்ற உலகத்தில் குதூகலமாய் குதித்து கொண்டாடிவிட்டு இன்று உலகத்தினரால் கொண்டாடப்படுகிறார்கள். நம் குழந்தைகள் அடிமைகள் அல்ல அவர்கள் நம்முடைய அன்பு பரிசுகள் என்று நினைத்து அரவணைத்தாலே அவர்கள் இந்த எல்லையில்லா உலகத்தை வென்று உங்கள் காலடியில் வைப்பார்கள். என் குழந்தை என் சொத்து என்று நினைக்காமல் என் குழந்தை என் அன்பு பரிசு என்று எண்ணும்போது உண்மையான உலகம் உங்கள் குழந்தையின் காலடியில் இருக்கும். சிறு வயதில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதுவே ஆலமரமாய் அவர்கள் மனதில் வேரூன்றி தழைக்கும். நிறைந்த அன்பு உங்களின் வாழ்க்கையை உயர்த்தி பிடிக்கும். குழந்தைகள் உங்கள் வாழ்க்கையின் உணர்வுகள், உறவுகள் மற்றும் உயரங்கள். இந்த உணர்வுகளை , உறவுகளை உயர்த்தி பிடிப்போம்.
No comments:
Post a Comment